DO YOU ENJOY THIS MY WEBSITE?
Friday, December 31, 2010
Thursday, December 30, 2010
நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்
நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்
மக்களிடம் இருந்து சுரண்டப்படும்
Sunday, December 26, 2010
பசி போக்குவோம் ! - டிச., 28 - மதுரையில் படியளந்தருளிய லீலை!
பசி போக்குவோம் ! - டிச., 28 - மதுரையில் படியளந்தருளிய லீலை! vayal | December 27, 2010 at 5:10 மு.பகல் | Categories: ஆன்மீகம் | URL: http://wp.me/pewfk-2g5 |
மார்கழி அஷ்டமியன்று மதுரை மீனாட்சியம்மன் கோவி லில் நடக்கும் படியளந்தருளிய லீலை நிகழ்ச்சி சிறப்பானது. கண்ணுக்குத் தெரியாத உயிர்களில் இருந்து மனித இனம் வரை, எல்லாருக்குமே ஆண்டவன் படியளக்கிறான். சிலருக்கு பெரும் பணத்தைக் கொடுத்திருக்கிறான். அது, அவர்களுக்காக மட்டுமல்ல, இல்லாதவர்களுக்கும் கொடுத்து உதவட்டுமே என்பதற்கும்தான். பசியுள்ள ஒருவனிடம் ஆன்மிகத்தைப் போதித்தால், அவனது காதுகளில் அது ஏறாது. முதலில் சாப்பாடு... பின்பு அவனிடம் என்ன சொன்னாலும் கேட்பான்.
உயிர்கள் பசியின்றி இருக்க தான தர்மம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் விழாவே இது.
ஒரு கதை மூலம் இதை விளக்கலாம்... ஒரு ஏழை, கடும் பசியுடன் திரிந்தான். வழியில் ஒரு மாந்தோப்பு தென்பட்டது. பழங்கள் கண்ணைக் கவரும் வகையில் தொங்கின. தோட்டத்துக்குள் புகுந்து விட்டான் அந்த ஏழை. அது, அரசருக்குரிய தோட்டம் என்பது அவனுக்குத் தெரியாது. பசி வேகம் கண்ணை மறைக்க, கல்லை விட்டெறிந்தான்; பழம் கீழே விழுந்தது. ஆர்வமாக பழத்தைச் சாப்பிட்டான் அவன். ஆனால், வீசி எறிந்த கல், சற்று தூரத்தில், தன் மனைவியருடன் மரத்தடியில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த அரசனின் தலையில் விழுந்தது. நல்ல வேளையாக அரசர் கிரீடத்துடன் இருந்ததால் தப்பித்தார். அவர், அதை பெரிதுபடுத்தவும் இல்லை. ஆனால், அங்கே காவலுக்கு நின்றவர்கள், அரசரிடம் நற்பெயர் பெறுவதற்காக உடனடி நடவடிக்கை எடுத்தனர். பழம் தின்று கொண்டிருந்த ஏழையைப் பிடித்து வந்து அமைச்சரிடம் நிறுத்தினர். அவர், அவனுக்கு மரணதண்டனை விதித்தார். இந்த தகவலை மன்னரிடம் ஓடோடி வந்து சொல்ல, மன்னர் அவனை தன் முன்னால் கொண்டு வரும்படி சொன்னார். அவனை இழுத்து வந்தனர். அவன் கல் வீசியதற்கான காரணம், பசி என்பதை புரிந்து கொண்டார். அவனை விடுவிக்கச் சொன்னார் அரசர். "அமைச்சரே... அறிவே இல்லாத இந்த மரம் கூட ஒரு கனியைக் கொடுத்து, இந்த மனிதனின் பசியைப் போக்கியிருக்கிறது. அறிவுள்ள ஜீவன்களான நாம், நம் நாட்டிலுள்ள இவனைப் போன்ற மக்களின் வறுமையைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இவனை விடுதலை செய்யுங்கள். இனி, ஏழைகளே இந்நாட்டில் இருக்கக்கூடாது. அவர்களைக் கணக்கெடுத்து உரிய பணி கொடுத்து பசியை விரட்டுங்கள்...' என உத்தரவு போட்டார்.
பார்வதிதேவிக்கும், பரமேஸ்வரனுக்கும் ஒருமுறை வாக்கு வாதம் வந்தது. "நீங்கள் எல்லாருக்குமே படியளப்பதாக சொல்கிறீர்களே... இதோ... இந்த செப்புக்குள் ஒரு எறும்பை விடுகிறேன். இதற்கு எப்படி படியளக்கிறீர்கள் என பார்க்கலாம்...' என்றாள். சிவன், அந்த செப்பை திறந்து பார்க்கச் சொன்னார். செப்பின் ஓரத்தில் ஒரு அரிசித் துகள் கிடந்தது. அதை, எறும்பு வாயில் கவ்விக் கொண்டிருந்தது. இவ்வாறாக, உயிர்களின் பசி போக்குவதை இறைவன் தன் கடமையாகக் கொண்டுள்ளது போல, நாமும் பிறர் பசி போக்க வேண்டும் என்பதை உணர்த்த பவனி வருவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர். அந்த சப்பரத்தில் நெற்கதிர்கள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் இருந்து சிந்தும் நெல்மணிகளை சிறு உயிர்கள் எடுத்துக் கொண்டு உயிர் வாழும். இந்த நன்னாளில், பசியில்லாத உலகம் அமைய அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வேண்டுவோம். ***
Friday, December 24, 2010
முத்துகள் உருவாவது எப்படி?
முத்துகள் உருவாவது எப்படி? vayal | December 25, 2010 at 10:55 மு.பகல் | Categories: அறிவியல் செய்திகள் | URL: http://wp.me/pewfk-2cH |
இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.
முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.
கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும்.
அதைத் தெரிந்துகொண்ட சீனர் கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.
ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.
இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.
Thursday, December 23, 2010
பருக்கள் மறைய
பருக்கள் மறைய vayal | December 24, 2010 at 10:54 மு.பகல் | Categories: மகளிர் | URL: http://wp.me/pewfk-2dA |
இயற்கை அழகே அழகு. சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம்.
சோற்றுக்கற்றாழைச் சாறு எடுத்து அதில் கார்போக அரிசி, வெந்தயம் இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, ஒருமணி நேரம் கழித்து நன்கு மைபோல் அரைத்து முகத்தில் பூசி அது காய்ந்த பின் சுத்தமான நீரினைக் கொண்டு முகம் கழுவி வந்தால், முகம் பொலிவு பெறும்.
பருக்கள் மறைய
பொதுவாக பருக்கள் எண்ணெய் பதார்த்தங்களை உண்பதால் ஏற்படுகிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களாலும், மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்.
முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன் பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும். அது காய்ந்தபின் முகத்தைப் பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும்.
செம்பருத்திப் பூ
ரோஜா மொட்டு
வெள்ளரிக்காய் சாறு
இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து நீர்விடாமல் அரைத்து அதனுடன் பச்சை பயறு மாவு கலந்து குழைத்து முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் பூசி காய்ந்த பின் கழுவி வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம், முகக்கருமை, முகப்பரு, கழுத்துப்பகுதி கருப்பு, முகத்தில் உண்டான தழும்புகள், மூக்கில் ஏற்படும் கருப்பு போன்றவை நீங்கும்.
பேன் பொடுகு மாற
வேப்பிலை, மருதோன்றி இலை, இரண்டையும் எடுத்து அதனுடன் சிறு துண்டு வசம்பு சேர்த்து மை போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். முடி உதிர்வது குறையும். புழுவெட்டு நீங்கும்.
உடல் நாற்றம் நீங்க
வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ், எலுமிச்சைப் பழத்தோல் ஆகியவற்றை மெல்லிய துணியில் கட்டி தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடல் நறுமணம் உண்டாகும். நாற்றம் நீங்கும். உணவில் காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் உடல் நாற்றம் ஏற்படாது.
காய்ந்த எலுமிச்சம் பழத்தோலை பொடிசெய்து அதனுடன் காய்ந்த ரோஜா இதழ் பொடி, வெட்டி வேர் (ராமிச்சம்) பொடி, இவைகளை சம அளவு எடுத்து இவற்றுடன் சிறிது சந்தனத் தூள் சேர்த்து நீரில் குழைத்து முகம் மற்றும் உடலெங்கும் பூசி குளித்து வந்தால், பித்தம் தணிந்து, பித்தச்சூடு குறைந்து வியர்வை நாற்றம் நீங்கும்.